உதயநிதியைப் பற்றி சொன்னால் ஸ்டாலினுக்கு பிரஷர் எகிறுது - அமித்ஷா

dmk bjp stalin amit shah udayanidhi
By Jon Apr 03, 2021 12:57 PM GMT
Report

நெல்லையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்துகொண்டு, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார கூட்டத்தில் பேசிய அமிதஷா ,பிரதமர் மோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மக்கள் நலன் குறித்து சிந்திக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் தன் மகனைப்பற்றி மட்டுமே கவலை கொள்கிறார்.

ஸ்டாலின் தன் மகனை முதல்வராக்குவது பற்றி யோசிப்பதாக கூறிய அமித்ஷா ,நான் உதயநிதியைப் பற்றி பேசும்போதெல்லாம், ஸ்டாலின் கோபப்படுகிறார்.

அவரது பிரஷர் உயர்கிறது.பின்னர் அவர் தனது அமைதியை இழந்து யாரைப் பற்றியாவது பேசுவதாக அமித்ஷா கூறினார். மேலும் பாஜக தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்தது. கட்சியின் இந்த மாநிலத் தலைவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் என அமித்ஷா பேசினார்.