சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு அப்பாவு போட்டி : திமுக தலமைக்கழகம் அறிவிப்பு
சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு அப்பாவு துணை தலைவர் பதவிக்கு கு. பிச்சாண்டி ஆகியோர் போட்டியிடுவதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 12-5-2021 அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், தி.மு.க. சார்பில் பேரவைத் தலைவராக திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவு அவர்களும்.
துணைத் தலைவராக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டி அவர்களும் போட்டியிடுகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
'தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக திரு. @AppavuDmk
— DMK (@arivalayam) May 10, 2021
MLA அவர்களும் - தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவராக திரு. @PitchandiK
MLA அவர்களும், திமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டி'
- தலைமைக் கழகம் அறிவிப்பு.
link: https://t.co/R8KvcoeODq#DMK pic.twitter.com/AoRuvBUkzk