பனைமரத்தை சொன்னதும் சபாநாயகர் ஆர்வத்தை பாருங்களேன் : சபாநாயகரை கலாய்த்த துரைமுருகன்!
சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களாக அமைச்சர் துரைமுருகனின் சிரிப்பலைக்கு பஞ்சம் இல்லை என்றுதான் கூறவேண்டும் .
இந்த நிலையில் (19.8.2020) நேற்றைய சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் என்ற பெயரில் பனை மரங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவற்றை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை இந்த அரசு முன்னெடுத்துவருவதாக சுட்டிக்காட்டி பேசினார்.
மேலும் சுனாமி தாக்கிய போது சாயாத ஒரே மரம் பனை மரம் தான் என்றும் தெரிவித்தார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, இனி ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு ஒரு லட்சம் பனை விதைகளை தனது சொந்த செலவில் வழங்குவதாகதெரிவித்தார். அப்போது எழுந்த அமைச்சர் துரைமுருகன்:

வேளாண்துறை அமைச்சர் அரை மணி நேரமாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை பேசும் போது அமைதிகாத்த சபாநாயகர், பனைமரம் குறித்து பேசிய உடனே, பேராரவத்தோடு பனை விதைகளை இலவசமாக வழங்குவதாக கூறுகிறார் என்று அவருக்கே உரிய பாணியில் கிண்டல் செய்ய சட்டப்பேரவையே சிரிப்பில் மூழ்கியது .