அறிமுகமாகும் 'பார்ன் பாஸ்போர்ட்' - ஆபாசப் படங்கள் பார்ப்பதை தடுக்க புதிய அம்சம்!
பார்ன் பாஸ்போர்ட் என்ற ஆப் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்ன் பாஸ்போர்ட்
ஸ்பெயின் நாட்டில் 18 வயதிற்கும் குறைவானோர் இணையதளங்களில் ஆபாசப் படங்கள் பார்ப்பதை தடுத்துநிறுத்தும் வகையில் பார்ன் பாஸ்போர்ட் என்ற புதிய அம்சம் அறிமுகமாகவுள்ளது.
அந்நாட்டில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பார்ன் தெரிவித்துள்ளார். மேலும், பார்ன் பாஸ்போர்ட்டின் முக்கியத்துவத்தை குறித்து அவர் வலியுறுத்தி பேசினார்.
QR குறியீடு
ஸ்பெயின் நாட்டில் வசிப்பவர்கள் பார்ன் பாஸ்போர்ட் ஆப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும். இந்த ஆப் அவர்களது வயதை உறுதிப்படுத்தும். பின்னர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு வயது சரிபார்க்கப்படும்.
அதன் பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் 30 கிரெடிட்களை வழங்கும். ஒவ்வொரு கிரெடிட்டும் ஆபாச இணையதளங்களை அணுகுவதற்கு QR குறியீட்டை உருவாக்கும். இந்த ஆப் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.