4 பேருடன் விண்வெளிக்கு செல்லும் INSPIRATION4 விண்கலம் - எதிர்பார்ப்பில் உலகநாடுகள்
எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பாக INSPIRATION4 விண்கலம் மூலமாக 4 பேர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
பெரும் பணக்காரர்களான ரிச்சர்டு பிரான்ஸன் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்ட விண்வெளி சுற்றுலா திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லவிருக்கிறார்.
செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்து செல்ல வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான முன்னோடி திட்டமான இதில் 4 பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இருக்கிறார்கள்.
இதற்காக ஃபுளோரிடாவில் உள்ள நாசாவுக்கு சொந்தமான கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஃபால்கன் ராக்கெட் மூலம் INSPIRATION4 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. உலக பணக்காரர்களுள் ஒருவரும், விமானங்களை இயக்குவதற்கான உரிமத்தை பெற்றவருமான ஜேர்ட் ஐசக் மேன் இதனை இயக்கவுள்ளார்.
விண்வெளி வீரர்கள் அல்லாமல் பொதுமக்கள் நான்கு பேரை விண்ணுக்கு அழைத்து செல்லும் முதல் விண்வெளி திட்டம் இது என கூறப்படுவதால் உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.