8 நிமிடம் தான்; விண்ணில் ஏவப்பட்ட நிலையில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் - SpaceX அதிர்ச்சி
ஸ்டார்ஷிப் வெடித்து சிதறியது விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஸ்டார்ஷிப்
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அடுத்தடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையை செய்து அசத்தி வருகிறது.
அந்த வகையில் 7வது முறையாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
ராக்கெட் இரண்டாக பிரிந்து பூஸ்டர் பகுதி பூமியை நோக்கி செங்குத்தாக கீழே இறங்க தொடங்கியது. ஆனால், அதன் பிறகு, 8.5 நிமிடங்களில் ஸ்டார்ஷிப்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது கரீபியன் கடல் பகுதியில் வெடித்து சிதறி விழுந்தது.
வெளியான தகவல்
இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இதுபோன்ற சோதனையின் மூலம் நாம் கற்றுக் கொள்வதில் இருந்து வெற்றி கிடைக்கும். மேலும் இன்று ஸ்டார்ஷிப் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க இந்த பூஸ்டர் நமக்கு உதவிகரமாக இருக்கும்,' என குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு மேலாளர் டான் ஹூட் கூறுகையில், 'அனைத்து தரவுகளையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிய சிறிது காலம் எடுக்கும்', எனக் கூறியுள்ளார்.