நிலவில் மோதி வெடிக்க உள்ள ராக்கெட்டின் ஒரு பகுதி - வெளியான அதிர்ச்சி தகவல்

Crash SpaceX Shocking News Moon Rocket
By Thahir Jan 27, 2022 06:00 PM GMT
Report

சில ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஷ் எக்ஸ் (Space x) நிறுவனம் ராக்கெட்டின் ஒரு பகுதி நிலவில் மோதி வெடிக்க உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

எளான் மஸ்கிற்கு சொந்தமான விண்வெளி நிறுவனமான ஸ்பேஷ் எக்ஸ் (Space x) சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் தன் பணியை நிறைவு செய்ததை அடுத்து அப்படியே விண்வெளியில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த ராக்கெட்டின் ஒரு பகுதி வருகிற மார்ச் மாதத்தில் நிலவில் மோதக்கூடும் என நாசாவின் நிதியுதவி பெற்ற விண்வெளி திட்டங்களில் பணியாற்றி வரும் விண்வெளி ஆய்வாளரான பில் கிரே கணித்திருக்கிறார்.

இந்த ராக்கெட் நிலவை நெருங்கிவிட்டதாகவும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி நிலவில் மணிக்கு 9 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதி வெடிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு ராக்கெட் நிலவில் மோதவுள்ளது இதுவே முதல் முறை எனவும் நிலவில் ராக்கெட் மோதும் தாக்கம் சிறிதாகவே இருக்கும் எனவும் இது நிலவின் நிலப்பரப்பில் சிறிய பள்ளத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்