விண்வெளி சுற்றுலாவில் பூமியை சுற்றிவரும் 4 பேர் - ஆச்சர்ய அனுபவங்கள்
tour
earth
space x rocket
By Anupriyamkumaresan
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தில் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ள நான்கு பேரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அங்கு கிடார் வாசிப்பது, படங்கள் வரைவது என்று கலைநயமான வேலைகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கலம் ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும்.

பூமியிலிருந்து 547 கிலோ மீட்டர் உயரத்தில் விண்வெளியில் சுற்றிவருவது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.