விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இலவச டிக்கெட் விற்பனை!

Ticket Space Space travel
By Thahir Aug 07, 2021 03:51 AM GMT
Report

சமீபகாலமாக விண்வெளிக்கு சென்று வருது ஒரு சுற்றலா சென்று வரும் விஷயமாக மாறிவிட்டது. முன்னர் விண்வெளிக்கு நாசா, இஸ்ரோ போல அரசு நடத்தும் அமைப்புகள் தான் விண்வெளிக்கு அரசு செலவில் ராக்கெட்களை அனுப்பி வந்தன. சமீபத்தில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் தனது ப்ளு ஆர்ஜின் நிறுவனம் மூலம் விண்வெளிக்கு சென்று திரும்பினார். அதே போல அமெரிக்காவின் விர்ஜின் நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பெரன்சன் ஒரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நடத்தி வருகிறார். விர்ஜின் கேலடிக் என்ற விண்வெளி ஆய்வு மையம் 17 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.

விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இலவச டிக்கெட் விற்பனை! | Space Ticket Space Travel

இந்நிறுவனம் தயாரித்த ராக்கெட் மூலம் இவர் பூமியை கடந்து விண்வெளி என சொல்லக்கூடிய பகுதிக்கு கடந்த ஜூலை 11 ம்தேதி பயணித்து மீண்டும் பூமிக்கு திரும்பினார். பூமியிலிருந்து 53 மைல் (சுமார் 83 கி.மீ) உயரத்திற்கு போய் வந்தார். இந்த செய்தி வைரலான நிலையில் அந்நிறுவனம் விண்வெளிக்கு வேறு ஆட்களை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இலவச டிக்கெட் விற்பனை! | Space Ticket Space Travel

அதன் படி வரும் 2022ம் ஆண்டு விண்வெளி மனிதர்களை சுற்றுலா கூட்டி செல்ல திட்டமிட்டுள்ளது. அதற்கான டிக்கெட்களை அறிவித்துள்ளது. தற்போது அதற்கான டிக்கெட் விலையாக 4.5 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது ரூ3.33 கோடியை அறிவித்துள்ளது. அதற்கான டிக்கெட்டை தற்போது விநியோகித்து வருகிறது. அது மட்டுமல்ல ஒட்டு மொத்த பயணத்தில் 2 டிக்கெட்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. அதன் படி விண்ணப்பிக்கும் நபர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவரையும் அவர் அழைத்து செல்ல விரும்பும் மற்றொருவரையும் விண்வெளிக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது.

விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இலவச டிக்கெட் விற்பனை! | Space Ticket Space Travel

இந்தியா குடிமகன்கள் இந்த இலவச டிக்கெட்டிற்கு விண்ணப்பிக்க முடியும். இந்த டிக்கெட்டிற்கு விண்ணப்பிக்க 18 வயதை கடந்திருக்க வேண்டும். மேலும் இந்த டிக்கெட் விற்பனை ஒமேஸ் என்ற நிறுவனம் மூலம் நடப்பதால் இந்நிறுவனத்தைச் சார்ந்த யாரும் டிக்கெட் வாங்க முடியாது. அதே போல அமெரிக்கா போன்ற சில நாடுகளில் சாதார குடிமக்கள் விண்வெளிக்கு பயணிக்க தடை இருப்பதால் அவர்களும் விண்ணப்பிக்க முடியாது. இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பயணத்தில் பயணிப்பவர்கள் விண்வெளி அனுபவத்தை உணர முடியும் எடை குறைவாக இருப்பது, பூமியில் வளைவாக இருப்பதை பார்ப்பது என பல அற்புதமான விஷயங்களை காண முடியும். இந்த பயணத்திற்கு விண்ணப்பிக்க omaze.com/space என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 1ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. செப் 29ம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கபடுவார்கள் அவர்கள் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள்.