அங்கேயும் குப்பை இருக்குமா? - குப்பையை அகற்ற சென்ற சீன செயற்கைக்கோள்

china rocket space dust
By Anupriyamkumaresan Oct 24, 2021 01:11 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விஞ்ஞானம்
Report

விண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காகவும் சீர் செய்வதற்காகவும் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ள சீனா அதை சோதிப்பதற்காக செயற்கைக் கோள் ஒன்றை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.

தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சிச்சாங்கிலிருந்து ஷிஜியான் - 21 என்ற செயற்கைக் கோள் லாங் மார்ச் - 3B என்ற ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதாக சீன விண்வெளித் துறை தெரிவித்துள்ளது.

அங்கேயும் குப்பை இருக்குமா? - குப்பையை அகற்ற சென்ற சீன செயற்கைக்கோள் | Space Dust Clean China Sent Rocket For Check

விண்வெளிக் குப்பைகளை அகற்றவும் அவற்றின் பாதையை சீர்செய்யவும் உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை இந்த செயற்கைக் கோள் மூலம் சீனா சோதித்து பார்க்க உள்ளது.

பல்வேறு உலக நாடுகள் ஏவிய செயற்கைக் கோள்கள் காலாவதியான பின் விண்வெளிக் குப்பையாக சுற்றி வருகின்றன. இவற்றால் வருங்காலங்களில் விண்வெளி செயல்பாடுகள் பாதிக்கும் என்ற அச்சம் உள்ள நிலையில் அதை சரி செய்யும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.