எஸ்.பி. வேலுமணியா - சாப்பாடா? நமக்கு சாப்பாடு தான்பா முக்கியம்! போராட்டத்திற்கு வந்த தொண்டர்கள் செய்த ரகளை!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பு போராட்டம் நடத்த குவிந்த தொண்டர்களுக்கு அதிமுக சார்பில் பிஸ்கட், தண்ணீர் கேன், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இதனால் காலை முதலே அவரது வீட்டிற்கு ஏராளமான தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு குவிந்து வரும் ஆதரவாளர்களுக்கு அதிமுக சார்பில் டீ, பிஸ்கட், உணவு பொட்டலங்கள் விநொயோகிக்கப்பட்டு வருகிறது.
இதனை வாங்கிய ஆதரவாளர்கள் அங்கேயே அமர்ந்து கூலாக சாப்பிட்டு வருகின்றனர். காலையில் சிற்றுண்டி முதல் உணவு பொட்டலங்கள் வரை நேர நேரத்திற்கு சாப்பாடு வந்து கொண்டிருக்கிறது.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி
வருகிறது.