ரெய்டில் சிக்கியது சாவி - வேலுமணியின் லாக்கரில் சிக்கியது என்னென்ன?

house issue it raid sp velumani
By Anupriyamkumaresan Sep 04, 2021 03:43 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

 எஸ். பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளில் 800 கோடி ரூபாய் அளவிற்கான ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று அறப்போர் இயக்கத்தினரும், திமுக அமைப்புச் செயலாளர் எஸ் .எஸ்.பாரதியும் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை பதிவு செய்த அந்த முதல் தகவல் அறிக்கையில் , முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் பெயர் A-1 என்று முதலாவது நபராக குற்றம்சாட்டப்பட்டது.

ரெய்டில் சிக்கியது சாவி - வேலுமணியின் லாக்கரில் சிக்கியது என்னென்ன? | Sp Velumani House Raid Issue

இதையடுத்து எஸ். பி. வேலுமணி வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி வேலுமணி வீட்டில் நடந்த சோதனையில் வங்கி லாக்கர் சாவி மட்டுமே கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று கைப்பற்றிய அந்த வங்கி லாக்கர் சாவியை வைத்து, அதிகாரிகள் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்து பார்த்துள்ளனர். கடந்த புதன்கிழமை அன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள எஸ் பி. வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்து சோதனையிட்டுள்ளனர்.

அதன் பின்னர் வங்கியின் மேலாளரிடம், வங்கியின் லாக்கர் கடைசியாக எப்போது திறக்கப்பட்டது என்றும் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

ரெய்டில் சிக்கியது சாவி - வேலுமணியின் லாக்கரில் சிக்கியது என்னென்ன? | Sp Velumani House Raid Issue

வங்கி லாக்கரை திறந்து அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் இருந்து ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றனவா என்கிற விவரம் இதுவரைக்கும் வெளியிடப்படவில்லை.