எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள் - போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு!!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 9 நிறுவனங்கள்,8 பேர் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 35 இடங்கள், சென்னையில் 15 இடங்கள், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் என மொத்தம் 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்த போது கோவை மாநகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து பணி செய்த வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் வழக்கு பதிந்துள்ளனர்.

வேலுமணி சகோதரர் பி.அன்பரசன் , ஏ. சந்திரசேகர், ஆர்.சந்திரசேகர், ஆர் முருகேசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அரசு ஒப்பந்தங்களை தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ace tech machinery,constronics infra,constromall உள்ளிட்ட நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் போலீசாரிடையும், தொண்டர்களிடையும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil
ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள் IBC Tamil
13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை IBC Tamil