முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாளிகளின் சொத்துக்கள் முடக்கம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாளிகளின் சொத்துக்களை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல் வேலுமணியின் கூட்டாளிகள் வீட்டிலும் அதிரடியாக சோதனை நடைபெற்றது.
கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக வேலுமணி இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கூட்டாளிகள் 2 பேருக்கு சொந்தமான ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கையை ஏற்று ரூ.110 கோடி நிரந்தர வைப்பு தொகை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.