திமுககாரன் 2 பேர் இருந்தாலும் கடைசி வரை பூத்ல இருப்பான்; ஆனால் நாம.. எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை
திமுக கைகளில் அதிகாரம் வந்த பின் மக்கள் பிரச்சனைகளை மறந்துவிட்டதாக எஸ்.பி.வேலுமணி சாடியுள்ளார்.
திமுக ஆட்சி
அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான எஸ்.பி.வேலுமணி,

திமுக கைகளில் அதிகாரம் வந்த பின் மக்கள் பிரச்சனைகளை மறந்துவிட்டது. தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக இல்லை. அதிமுக 31 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளது. அதிக திட்டங்களையும் அதிமுகவே கொண்டு வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகச்சிறப்பாக ஆட்சி நடைபெற்றது.
வேலுமணி சாடல்
7.5% இடஒதுக்கீடு எல்லாம் யாராவது நினைத்து பார்க்க முடியுமா? ஆனால் திமுககாரன் 2 பேர் மட்டும் இருந்தாலும் கூட, கடைசி வரை நின்று வேலை செய்கிறான். நாம் 50 பேர் இருப்போம். நிச்சயம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைத்து கொண்டிருப்போம். அதனால் நம்முடைய பணிகளை நாம் சிறப்பாக செய்ய வேண்டும்.

2021ல் அதிமுக ஆட்சி அமைய வேண்டியது. வெறும் ஒன்றரை சதவிகித வாக்குகளில் தவறவிட்டுவிட்டோம். வரைவு வாக்காளர் பட்டியல் வந்தபின், நமது குடும்பம் மற்றும் நமது கட்சிக்காரர் வாக்குகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணியை அமைப்பார். அரசு ஊழியர்கள் கூட அதிமுகவை எதிர்பார்க்கிறார்கள். திமுக ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்பதை மக்களும் அறிந்தே இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.