கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர்.
தேர்தல் விதிமுறைகளின்படி கரூர் மாவட்ட திமுகவினரை கோவையை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் எனவும் தேர்தலின் பாதுகாப்புக்கு துணை ராணுவ படையை நியமிக்க வேண்டும் என
இன்று காலை முதல் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டமானது தொடரப்பட்ட நிலையில் காவல்துறையினர் பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்ததால் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உட்பட
9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
இதனால் அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது அனைவரும் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளனர்.