பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை: சிபிஐ விசாரணை தேவையில்லை!

court cbi
By Irumporai Apr 21, 2021 10:30 AM GMT
Report

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொத்ததாக சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

முதல்வர் பழனிசாமிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பெண் எஸ்.பி ஒருவருக்கு டிஜிபி அந்தஸ்திலான காவல்துறை அதிகாரி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு விசாகா கமிட்டியை அமைத்த அதே வேளையில் வழக்கு சிபிசிஐடி வசம் மாறியது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறை பெண் அதிகாரிகளுக்கே இப்படி ஒரு நிலைமையா? என அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை: சிபிஐ விசாரணை  தேவையில்லை! | Sp Rajeshdoss Court Cbi

இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிறப்பு டிஜிபி வழக்கு விசாரணையை தனி நீதிபதி கண்காணித்து வருதால் மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு அவசியம் இல்லை என கூறியுள்ளது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையை கண்காணித்து வரும் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும் எனவும், ஒருதலைப்பட்டசமாக முடிவெடுக்கக் கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்