ஏ.ஐ மூலம் எஸ்.பி.பி குரல்.. அவர் இறந்துவிட்டார்.. விட்டுவிடுங்கள் - எஸ்.பி.பி சரண் எதிர்ப்பு!

Tamil Cinema S P Balasubrahmanyam Tamil nadu S. P. Charan
By Swetha Nov 28, 2024 04:22 AM GMT
Report

ஏ.ஐ மூலம் எஸ்.பி.பி குரலை பயன்படுத்த எஸ்.பி.பி சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி குரல்...

இன்றைய காலக்கட்டத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் இன்றியமையாத ஒன்றாக மாறி வருகிறது. தற்போது சினிமாவில் ஏஐயில் பயன்பாட்டு மெல்ல மெல்ல அதிகரித்து வருவதை காண முடிகிறது. அதாவது, மறைந்த நடிகர்கள் மீண்டும் நடிப்பதைப்போல காட்சிகளும் பாடகர்கள் குரலில் பாடல்களும்

ஏ.ஐ மூலம் எஸ்.பி.பி குரல்.. அவர் இறந்துவிட்டார்.. விட்டுவிடுங்கள் - எஸ்.பி.பி சரண் எதிர்ப்பு! | Sp Charan Is Againts Using Ai Spb Voice In Songs

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில், விஜய் நடிப்பில் வெளியான 'திகோட்' படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதைப்போல் காட்சி இருந்தது. அதே படத்தில் மறைந்த பாடகி பவதாரிணியின் குரலிலும் ஒரு பாடல் இடம் பெற்றது.

இனி காம்தார் நகரில்லை..எஸ்.பி பாலசுப்ரமணியம் சாலை ;அறித்த ஸ்டாலின் - நெகிழ்ந்த சரண்!

இனி காம்தார் நகரில்லை..எஸ்.பி பாலசுப்ரமணியம் சாலை ;அறித்த ஸ்டாலின் - நெகிழ்ந்த சரண்!

எஸ்.பி.பி சரண் 

அதேபோல, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் 'மனசிலாயோ' பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரல் இடம்பெற்றிருந்தது பெரும் ஹிட்டானது. இந்த நிலையில், தனது தந்தை மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் குரலை

ஏ.ஐ மூலம் எஸ்.பி.பி குரல்.. அவர் இறந்துவிட்டார்.. விட்டுவிடுங்கள் - எஸ்.பி.பி சரண் எதிர்ப்பு! | Sp Charan Is Againts Using Ai Spb Voice In Songs

ஏ.ஐ மூலம் படங்களில் கேட்பதில் விருப்பமில்லை என்று எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், எனது தந்தையின் குரலை ஏ.ஐ மூலம் பயன்படுத்த நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டனர்.

ஆனால், நான் முடியாது என்றேன். ஒரு சிறந்த இசையமைப்பாளராக இருந்தாலும் இதே பதில்தான். ஏ.ஐ மூலம் அவரது குரலை கேட்பதை நாங்கள் விரும்பவில்லை. அவர் இறந்துவிட்டார், அவரை விட்டுவிடுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.