என் அன்னய்யா பாலு, பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர்: உருகிய கமல்ஹாசன்

kamalhassan spbalasubrahmanyam First Death Anniversary
By Irumporai Sep 25, 2021 07:53 AM GMT
Report

என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். நடிகராகவும் தன் திறமையை காட்டிய எஸ்.பி.பி, கொரோனா காரணமாக கடந்த ஆண்டு இதே நாளில், சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.

அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் #spbalasubrahmanyam என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் : என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர் என்று கூறியுள்ளார். மேலும் ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாக வே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர், சாரீரமாக நம்மோடு உலவுகிறார்' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.