"மூர்க்கத்தனமான கும்பல்"!! சோசியல் மீடியாகாலில் அந்த மாறி கமெண்ட்ஸ்!! சொர்ணமால்யா வருத்தம்!!
அதிகரித்து வரும் சமூகவலைத்தள யுகத்தில் அதில் ஏற்பட்ட அனுபவத்தை நடிகை சொர்ணமால்யா பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகை சொர்ணமால்யா
பரத நாட்டிய கலைஞராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை சொர்ணமால்யா. அலைபாயுதே படத்தில் ஷாலினியின் சகோதரியாக நடித்து அறியப்பட்ட இவர், பின்பு எங்கள் அண்ணா, மொழி, பெரியார், வெள்ளித்திரை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தனியார் நடன பள்ளி ஒன்றை நடத்தி வரும் இவர், தன்னுடைய சமூகவலைத்தள அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த பேட்டியில், சோசியல் மீடியாவில் நாம் தான் இருக்கிறோம் என குறிப்பிட்டு, சோசியல் மீடியா என்பது மிகவும் வக்கிரமாக இருக்கிறது என்றும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்றார்.
மூர்க்கத்தனமான கும்பல்
மற்றவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை நாம் கமெண்ட் ஆக பதிவிட்டால், அதற்கு கீழே ஒரு முகவரிக்குள் ஒளிந்து கொண்டு குறைந்தது ஒரு 25 பேராவது உங்களை கழுவிவுட்ருவார்கள் என்று கூறி, எல்லோராலும் இப்படி கோழைத்தனமாக சண்டையிட முடியும் என விமர்சித்து, அப்படி சண்டை இடுவது, திட்டுவது என்பது மிகவும் கோழைத்தனமான ஒரு செயல் என்றார்.
[LFAKJW[
இளம் வயதினரை இந்த சோசியல் மீடியா மிகவும் பாதிக்கிறது என சுட்டிக்காட்டிய சொர்ணமால்யா, பெண்கள் அதில் எதாவது சொல்வதற்கு மிகவும் பயப்படுகிறார்கள் என தெரிவித்து ஒரு மூர்க்கத்தனமான ஒரு கும்பலிடம் சென்று, அவர்களிடம் ஒரு விஷயத்தை எடுத்து சொல்வதால் என்ன நடந்து விடப்போகிறது என கூறினார்.
நம் வீட்டில் உள்ளவர்களே நாம் பேசும் பேச்சை பெரிதாக கேட்பதில்லை என்ற நிலை இருக்கும் போது, சோசியல் மீடியாவில் உள்ளவர்கள் நாம் கூறுவதை புரிந்து கொண்டு நாம் கூறுவது சரி தான் என கூறுவது கடினம் என்ற சொர்ணமால்யா, ஆகையால் நாம் எங்கு சண்டையிட வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என கூறி அதுபோல எந்த மாதிரியான தளங்களில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.