21 வயசுலயே டைவர்ஸ்..ரொம்ப வயசு கம்மி... அதனால..! சொர்ணமால்யா ஓபன் டாக்!!
நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான சொர்ணமால்யா தனது கல்யாணம் - விவாகரத்து குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
நடிகை சொர்ணமால்யா
பரத நாட்டிய கலைஞராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை சொர்ணமால்யா. அலைபாயுதே படத்தில் ஷாலினியின் சகோதரியாக நடித்து அறியப்பட்ட இவர், பின்பு எங்கள் அண்ணா, மொழி, பெரியார், வெள்ளித்திரை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தனியார் நடன பள்ளி ஒன்றை நடத்தி வரும் இவர், தனது வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை குறித்து தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வாழ்க்கை நிற்க போவதில்லை
அதில், தனக்கு விவகாரத்தானபோது இப்போது தனக்கு இருக்கக்கூடிய புரிதல் இல்லை என்று கூறி, வாழ்க்கையில் கல்யாணம் நடந்தது - அதை விட்டு வெளியே வந்தேன் அவ்வளவுதான் என்று குறிப்பிட்ட சொர்ணமால்யா, அப்படித்தான் தான் அதனை தான் அணுகியதாக கூறினார்.
வாழ்க்கையில் விவாகரத்து என்ற கான்செப்ட் வந்த உடனே, அம்மா தன்னை MA படிக்க சேர்த்து விட்டுவிட்டார் என்றும், அந்த சமயத்தில் அவர் எதற்காகவும் வாழ்க்கை நிற்க போவதில்லை என்று அறிவுறுத்தி ஆகையால் படிப்பில் கவனம் செலுத்த அவர் அறிவுறித்தியதாக தெரிவித்தார்.
விவாகரத்திற்கு என்ன காரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற சொர்ணமால்யா, அப்போது தனக்கு 21 வயது தான் என்றும் அது கூட ஒரு காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டார். தனது பெற்றோர்கள் நினைத்தபடி தான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்ல முடியும், ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.