தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறுமா? சௌமியா அன்புமணி பதில்

PMK Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 31, 2026 12:10 PM GMT
Report

sowmiya anbumani react to pmk join in tvk ministry: தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறுமா என்ற கேள்விக்கு சௌமியா அன்புமணி பதிலளித்துள்ளார்.

தவெக அமைச்சரவையில் பாமக?

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் தவெக அமைச்சரவையில் சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஊகங்கள் வெளியானது. 

தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறுமா? சௌமியா அன்புமணி பதில் | Sowmiya Anbumani React To Pmk Join In Tvk Ministry

அந்த தேர்தலில், பாமக போட்டியிடாததோடு என கட்சிக்கு ஆதரவில்லை என அறிவித்தது.

ஆனால், பாமக உள்ளே வந்தால் தவெக கூட்டணியிலிருந்து வெளியேறும் என விசிக அறிவித்தது.

இந்நிலையில், தவெக அமைச்சரவையில் பாமக பங்குபெறுமா என சட்டமன்ற பாமக தலைவர் சௌமியா அன்புமணியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், "எதிர்பார்ப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அமைச்சரவையில் பாமக பங்கேற்கும் சூழல் இல்லை. பொறுப்புள்ள அரசியல் கட்சியாக அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க பாமக என்றைக்கும் தயாராக இருக்கிறது. 

தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறுமா? சௌமியா அன்புமணி பதில் | Sowmiya Anbumani React To Pmk Join In Tvk Ministry

தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண்களை காவல்துறை பணிக்கு தேர்வு செய்தால் 'சிங்கப்பெண் படையை' மேலும் பலப்படுத்த முடியும் என அரசிடம் அறிவுறுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.