பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

Actress
By Fathima Aug 21, 2026 09:41 AM GMT
Report

Sowcar Janaki Dead: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை சௌகார் ஜானகி காலமானார், அவருக்கு வயது 94.

சௌகார் ஜானகி மரணம்

1950, 60 களில் முன்னணி நாயகியாக வலம்வந்தார் சௌகார் ஜானகி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் | Sowcar Janaki Dead

தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

2022ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் | Sowcar Janaki Dead

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening