கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழப்பு - நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்ட அமைச்சர்

Viral Video South Korea
By Nandhini Nov 02, 2022 11:20 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் 150 பேர் உயிரிழப்பு சம்பவத்திற்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஹாலோவீன் திருவிழா

கடந்த 30ம் தேதி தென் கொரியாவின் சியோல் நகரில் இதாவோன் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தது. கொரோனா பரவலுக்கு பிறகு இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடக்க இருந்த இத்திருவிழாவில் சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் அங்கு ஒன்றாக திரண்டனர்.

நெரிசலில் சிக்கி 151 மரணம்

கொண்டாட்டத்தின்போது, ஒரு குறுகிய தெருவில் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடியதால், அங்கு ஒருவர் மீது ஒருவர் தள்ளப்பட்டார்கள். இந்தக் கூட்ட நெரிசலில் பலர் சிக்கித் தவித்தனர். மூச்சு விட முடியாமல் பலர் அவதிப்பட்டனர். இந்த கூட்டத்தில் சிக்கி பலர் நசுக்கப்பட்டனர். இதுவரை கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பிரபல நடிகர் மரணம்

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல நடிகர் மற்றும் பாடகர் லீ ஜி ஹான் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

southkorea-150-dead-itaewontragedy-halloween

மன்னிப்பு கேட்ட அமைச்சர்

இந்நிலையில், ஹொலோவீன் கொண்டாடத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 150 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நாடாளுமன்றத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இவரைத் தொடர்ந்து, இந்த கோர விபத்தை தடுக்க தவறியதற்கு பொறுப்பேற்பதாக காவல்துறை தலைவரும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.  

southkorea-150-dead-itaewontragedy-halloween