அமித்ஷா தலைமையில் தென்மண்டல குழு

Vijay Amit Shah
By Fathima Aug 20, 2026 04:45 AM GMT
Report

Southern Zonal Council Meeting: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று தென்மண்டல குழுவின் 31வது கூட்டம் கோவளத்தில் நடைபெறவுள்ளது.

31வது தென்மண்டல குழு

1956ன் சட்டப்பிரிவுகள் 15 முதல் 22ன் கீழ் தென்மண்டல குழு உள்பட ஐந்து மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டன.

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறும் தென்மண்டல குழுவின் 31வது கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், புதுச்சேரி அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செயல்படுகிறார், இந்த முறை துணைத்தலைவராக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பு வகிக்கிறார்.

அமித்ஷா தலைமையில் தென்மண்டல குழு | Southern Zonal Council Meeting Today

நதிநீர் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு

கூட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகள் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சனைகள், நதிநீர் பங்கீட்டுத் திட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம், விமான போக்குவரத்து, கல்வி போன்றவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.