சென்னையில் இருந்து புறப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து - முழுவிவரம் இதோ..
5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல்
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புயல் கரையை கடந்த பிறகும் மழை மற்றும் காற்றின் தாக்கம் குறையாமல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
ரயில்கள் ரத்து
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் விரைவு ரயில், மதுரை - சென்னை வைகை விரைவு ரயில், காரைக்குடி - சென்னை பல்லவன் விரைவு ரயில், சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில்,
சென்னை - மதுரை தேஜாஸ் விரைவு ரயில், பல்லவன் அதிவிரைவு ரயில், சோழன் விரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மதுரையில் இருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எழும்பூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளும் ரத்த செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.