அமோனியாவை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து - வாயு கசிவால் 51 பேர் கவலைக்கிடம்...!

Accident Serbia
By Nandhini Dec 26, 2022 08:27 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

செர்பியாவில் அமோனியாவை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

ரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து -

செர்பியா - கிழக்கு செர்பியாவில் நேற்று அம்மோனியாவை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கசிவு வெளியானதால் 51க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தையொட்டி Pirot நகரில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமோனியா கசவு காரணமாக அப்பகுதியில் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

விபத்துக்குள்ளான இடத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அமோனியா கசிவு காரணமாக, பல்கேரியாவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போலீசார் நெடுஞ்சாலையை மூடிவிட்டு உள்ளூர் சாலைகளுக்கு போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.

ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

southeast-serbia-train-accident-ammonia