ஒருநாள் கிரிக்கெட்: தென்னாப்ரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து
ireland
vs
southafrica match
By Anupriyamkumaresan
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், முதன்முறையாக தென்னாப்ரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து சாதனைப் படைத்துள்ளது.
அயர்லாந்து தலைநகர் டூபலினில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து, கேப்டன் ஆண்டி பால்பரைனின் சதத்தால், 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய தென் ஆப்ரிக்கா 48.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் முதன்முறையாக, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அயர்லாந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.