தமிழகத்தில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை : இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

TN Weather
By Swetha Subash May 31, 2022 08:30 AM GMT
Report

தமிழகத்தில் தென் மற்றும் வட தமிழத்தின் உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாகவும், அதன் காரணமாக இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி,கோவை, திருப்பூர்,திண்டுக்கல்,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும்,நாளை முதல் நான்கு நாட்கள் தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை : இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! | South West Monsoon Rain Started In Tamil Nadu

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை : இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! | South West Monsoon Rain Started In Tamil Nadu

மேலும், தென் கிழக்கு அரபிக்கடல்,இலட்சத்தீவு,கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல்,தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மாலத்தீவு பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.