தென்சூடானில் கடும் பஞ்சம்...ஒருவேளை உணவுக்கே திண்டாடும் மக்கள் - கண் கலங்க வைக்கும் வீடியோ...!

Viral Video South Africa
By Nandhini Nov 15, 2022 07:31 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

தென்சூடானில் வரலாறு காணாத வெள்ளத்தால், அந்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை உணவுக்கே குழந்தைகள் திண்டாடி வருகின்றனர்.

தென்சூடானில் கடும் பஞ்சம்

தென்சூடானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதால், அந்நாட்டின் பெரும் பகுதிகள், விளைநிலங்கள், வீடுகள் வெள்ள நீரில் மூங்கின.

இதனால், வாழ்வாதாரங்களை அழித்து அந்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சுமார் 1 மில்லியன் மக்கள் அந்நாட்டை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். பலர் இடம் பெயர முடியாமல் ஒரு வேளை சோற்றுக்கே சிக்கித் தவித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் வெள்ள நீரின் உயரத் தொடங்கியது. இதனால், விளைநிலங்களில் உள்ள பயிர்கள் முழுவதும் அழிந்தன. சாலைகள் சதுப்பு நிலமாக்கியது. உள்நாட்டுப் போரிலிருந்து மீளப் போராடும் இளம் நாட்டில் பசி மற்றும் நோய்கள் பரவி வருகின்றன.   

15% நிலங்கள் பாசி படர்ந்த ஈர நிலங்களாக மாறியதால், 29 லட்சம் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று சர்வதேச செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உலக மக்களின் இதயங்களை ரணமாக்கியுள்ளது.