தமிழகத்தை உலுக்கிய ரயில் விபத்து -18 ரயில்களின் சேவை ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Tamil nadu Train Crash Indian Railways
By Vidhya Senthil Oct 12, 2024 04:43 AM GMT
Report

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து தமிழ்நாடு வழியாக பிகார் மாநிலம் தர்பாங்காவை நோக்கி, சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியில் இரவு 8.30 மணி அளவில் சரக்கு ரயில்கள் மீது மோதி விபத்துகுள்ளானது.

ரத்து செய்யப்பட்ட 18 ரயில்களின் விவரம்:

இதில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டன. சில ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.ரயில் பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். இருப்பினும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதால் ரயில்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

train accident

மேலும், இன்று இயங்கவுள்ள 18 ரயில்களின் சேவைகளை ரத்து செய்தும், சில ரயில்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ரத்து செய்யப்பட்ட 18 ரயில்களின் விவரம்:

  •  திருப்பதி - புதுச்சேரி MEMU ரயில் (வண்டி எண்.16111)
  • புதுச்சேரி - திருப்பதி MEMU ரயில் (வண்டி எண்.16112)
  • சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 16203)
  • திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16204)
  • சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16053)
  • திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16054)

90 கி.மீ. வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் - தடம் புரண்டு விபத்து - நடந்தது என்ன?

90 கி.மீ. வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் - தடம் புரண்டு விபத்து - நடந்தது என்ன?

https://ibctamilnadu.com/article/5-kavarapettai-train-accident-rescue-cm-stalin-1728700400

  • சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16057)
  • திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16058)
  • அரக்கோணம் - புதுச்சேரி MEMU ரயில் (வண்டி எண்.16401)
  • கடப்பா - அரக்கோணம் MEMU ரயில் (வண்டி எண்.16402)
  • சென்னை சென்ட்ரல் - திருப்பதி MEMU ரயில் (வண்டி எண்.06727)
  • திருப்பதி - சென்னை சென்ட்ரல் MEMU ரயில் (வண்டி எண்.06728)
  • அரக்கோணம் - திருப்பதி MEMU ரயில் (வண்டி எண்.06753)
  • திருப்பதி - அரக்கோண்டம் MEMU ரயில் (வண்டி எண்.06754)
  • விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12711)
  • சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12712)
  • சூலூர்பேட்டை - நெல்லூர் MEMU ரயில் (வண்டி எண். 06745)
  • நெல்லூர் - சூலூர்பேட்டை MEMU ரயில் (வண்டி எண். 06746)

indian railway

மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்ட ரயில்கள் விவரம்:

  •  கன்னியாகுமரி - நிசாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12641)
  • சென்னை சென்ட்ரல் - லக்னோ சந்திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16093)
  • அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12655)
  • பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.22644)
  • சென்னை சென்ட்ரல் - நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12611)
  • ஹவுரா கிளம்பிய சென்னை சென்ட்ரல் ரயில் (வண்டி எண்.12839)
  • புதுடெல்லி - சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12616)
  • காக்கிநாடா துறைமுகம் - செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.17644) உள்ளிட்ட பல ரயில்களின் பாதையை தெற்கு ரயில்வே மாற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.