இனி மாஸ்க் போட தெவையில்லை - அறிமுகமானது கோஸ்க்
தென்கொரியாவில் மூக்கு பகுதியை மட்டும் மூடிவிட்டு, வாய் பகுதியை அப்படியே விட்டுவிடும் வகையில் மாஸ்க் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதல் இன்று வரை கடந்த 2 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் புது, புது அவதாரங்கள் எடுத்து கொரோனா உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் மாஸ்க் இல்லாமல் பொது இடங்கள் என எங்கு சென்றாலும் அது சிக்கல் தான்.
நகமும் சதையும் போல மாஸ்க் நம்முடைய தேவையில் அடங்கிக்கொண்ட நிலையில் பலரின் கவலை மாஸ்க் போட்டுக் கொண்டு வெளி இடங்களில் எப்படி சாப்பிடுவது, தண்ணீர், கூல்டிரிங்க்ஸ் எப்படி குடிப்பது? என்ற கேள்வி தான்.
அதற்கு விடையளிக்கும் வகையில் தென் கொரிய நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. அதற்கு பெயர்தான் ‘கோஸ்க்’ கோ என்றால் தென்கொரிய மொழியில் மூக்கு என்று அர்த்தம் என்பதால் இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அட்மான் என்ற நிறுவனம் மூக்கு பகுதியை மட்டும் மூடிவிட்டு, வாய் பகுதியை அப்படியே விட்டுவிடும் வகையில் இதை தயார் செய்துள்ளது. கே.எஃப்.80 என்ற பெயரில் ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக இது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்றொரு வடிவமைப்பு கொண்ட கோஸ்க் எப்போதும் போல முகத்தையும், வாயையும் மூடும் வகையில் இருக்கும். ஆனால் அதை வாடிக்கையாளர்கள் மடித்துக் கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.