K-Dramaவின் பிரபல 24 வயது நடிகை வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு!
நடிகை கிம் சே ரான் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கிம் சே ரான் மறைவு
தென்கொரியாவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை கிம் சே ரான். லிசன் டு மை ஹார்ட்', 'தி குயின்ஸ் கிளாஸ்ரூம்,' மற்றும் 'ஹாய்! ஸ்கூல்-லவ் ஆன்' என பல கொரிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
மேலும், பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டில் இறந்த நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று கிம் சே ரானை சந்திக்க அவரது நண்பர் சென்றுள்ளார்.
ரசிகர்கள் கண்ணீர்
அவரை பார்த்து அதிர்ச்சியடைந்து எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் அவரிடம் எந்த அசைவும் இல்லை. உடனே தகவலின் மூல சம்பவ இடம் விரைந்த போலீஸார் மற்றும் மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சியோலில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் கைது செய்யப்பட்டார். இது பெரும் சர்ச்சையான நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
பின் பார்ட் டைம் வேலை செய்து வாழ்க்கையை கடத்தி வந்தார். இருப்பினும் . சில மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க முயன்றார். ஆனால், உடல்நல பிரச்சினைகளால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.