நாட்டை உலுக்கிய சம்பவம்: ஒரே நேரத்தில் 50 பேருக்கு மாரடைப்பு.. அலறிய மக்கள் - பின்னணி என்ன..

Viral Video Festival Accident South Korea
By Sumathi Oct 30, 2022 05:31 AM GMT
Report

ஒரே நேரத்தில் 50 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கூட்ட நெரிசல்

தென்கொரியா, தலைநகர் சியோலில் உள்ள இட்டவோன் நகரில் மிகப்பெரிய அளவில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹாலோவீன் விழா காரணமாக அந்த பகுதியே கோலாகலமாக கானப்பட்டது.

நாட்டை உலுக்கிய சம்பவம்: ஒரே நேரத்தில் 50 பேருக்கு மாரடைப்பு.. அலறிய மக்கள் - பின்னணி என்ன.. | South Korea Stampede During Halloween

இதில் கலந்துக் கொள்ள 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்திருந்தனர். இதனால் கூட்ட நெரிசம் ஏற்பட்டது. தொடர்ந்து மக்கள் முண்டியடிக்க தொடங்கி ஒருவரையொருவர் தள்ள தொடங்கினர். இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மலை போல் சரிண்டனர்.

 கதறிய மக்கள்

அதனயடுத்து, இவர்களை மீட்க போலீஸார், தீயணைப்பு படையினர் வந்தும் மீட்க முடியவில்லை. அந்த அளவுக்கு நெரிசலில் மக்கள் ஸ்தம்பித்து போகியிருந்தனர். இந்த கூட்ட நெரிசலில் அடியில் சிக்கிய பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

மேலும் மூச்சு திணறலில் அவதிப்பட்டனர். உடனே அவர்களை சிரமப்பட்டு மீட்டு அவசர உதவி செய்யப்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியது. இந்நிலையில், 50 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி 149 பேர் பலியாகினர். 150 பேருக்கும் மேலாக பலத்த காயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.