உலகை உலுக்கிய சம்பவம் - ஹாலோவீன் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி பிரபல நடிகர் மரணம்... - ரசிகர்கள் ஷாக்..!

South Korea
By Nandhini Nov 01, 2022 01:59 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உலகை உலுக்கிய தென்கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி பிரபல நடிகர் மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது. 

ஹாலோவீன் திருவிழா

கடந்த 30ம் தேதி தென் கொரியாவின் சியோல் நகரில் இதாவோன் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தது.

கொரோனா பரவலுக்கு பிறகு இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடக்க இருந்த இத்திருவிழாவில் சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் அங்கு ஒன்றாக திரண்டனர்.

நெரிசலில் சிக்கி 151 மரணம்

கொண்டாட்டத்தின்போது, ஒரு குறுகிய தெருவில் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடியதால், அங்கு ஒருவர் மீது ஒருவர் தள்ளப்பட்டார்கள்.

இந்தக் கூட்ட நெரிசலில் பலர் சிக்கித் தவித்தனர். மூச்சு விட முடியாமல் பலர் அவதிப்பட்டனர். இந்த கூட்டத்தில் சிக்கி பலர் நசுக்கப்பட்டனர். இதுவரை கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

south-korea--itaewon-area-lee-ji-han

பிரபல நடிகர் மரணம் 

இந்நிலையில், தற்போது இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல நடிகர் மற்றும் பாடகர்  என்பவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்தியை 935 என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லீ ஜி ஹான் உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவருக்கு சமூகவலைத்தளங்களில் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.