குழந்தை பெற்றால் ரூ.60 ஆயிரம் உதவித்தொகை - தென்கொரிய அரசு அதிரடி அறிவிப்பு
குழந்தை பெற்றால் ரூ.60 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தென்கொரிய அரசு அறிவித்துள்ளது.
குழந்தை பிறப்பு விகிதம்
தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென்கொரிய அரசு சூப்பர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, இனி புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
வளர்ந்த நாடான தென்கொரியாவில் உலகிலேயே மிகவும் குறைவான குழந்தை பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. அந்நாட்டில் வெறும் 5 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் பெண் ஒருவருக்கு சராசரியாக 0.84 ஆக குறைந்துள்ளது.
மக்கள் தொகை குறையாமல் இருக்க, குழந்தை பிறப்பு விகிதம் பெண் ஒருவருக்கு 2.1 ஆக இருக்க வேண்டும். இதனையடுத்து, தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.