முக்கிய அணைகளின் நீர்மட்டம் 10 ஆண்டு காணாத சரிவு! தத்தளிக்குமா தென்னிந்தியா?
10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் மட்டம் சரிந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
முக்கிய அணைகள்
இந்தியாவின் தற்போதைய கோடைகாலம் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வெப்பம் கடுமையாக நிலவி வருகிறது. வெப்பநிலை மக்களை படு மோசமாக வாட்டி வதைக்கிறது. அதே சமயத்தில் கோடைகாலம் வந்தாலே வறட்சியும், நீர் தட்டுப்பாடும் சேர்ந்தே வந்து விடுகிறது.
இந்த நிலையில், தென்னிந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அணைகள், நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவர தகவலில் தெரியவந்துள்ளது. மத்திய நீர் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, தென்னிந்தியா நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது.
ஏனெனில் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு வெறும் 17 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நீர் இருப்பு 29 சதவீதமாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் சராசரி நீர் இருப்பு 23 சதவீதமாக இருந்தது.
கென்யாவில் பேரழிவு தரும் வறட்சி... - 200 யானைகள் உட்பட ஆயிரக்கணக்கான காட்டு விலங்குகள் பலி... - நெஞ்சை உலுக்கும் படங்கள்
நீர்மட்டம் சரிவு
தற்போது தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 43 அணைகள் உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான 150 அணைகளில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நீர் இருப்பு 82 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த அணைகளில் 64.775 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) நீர் இருப்பு இருந்தது. இந்த ஆண்டுபொறுத்தமட்டிலும் 53.775 பிசிஎம் ஆக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சுழலில் கடந்த 10 ஆண்டு நேரடி நீர் சேமிப்பின் சராசரி 55.523 பிசிஎம் ஆகும்.
தென் இந்தியாவை தவிர, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவுடன் ஒப்பிடும்போது நேரடி சேமிப்புத் திறனில் அதிக பற்றாக்குறை உள்ளது. மேலும், வருகின்ற ஜூன் - செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது நீர் பற்றாக்குறை நீங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.