south india என்றாலே ஐட்டம் சாங்தான் : சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகை .. விளாசும் விமர்சகர்கள்
பாலிவுட் படங்களுக்கு இணையாக தற்போது தென்னிந்திய திரைப்படங்களும் இருந்து வருகின்றன.
அதிக வசூல் செய்யும் படங்கள்
குறிப்பாக இந்த வருடம் வெளியான கேஜி.எஃப் 2 , விக்ரம், ஆர் ஆர் ஆர், காந்தாரா , பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் இந்திய அளவில் அதிக வசூலை செய்தன. இந்த நிலையில் தற்போது பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் கதாநாயாகியாக நடித்துள்ள ராஷ்மிகாவின் நடனம் என்ன மாமா என்ற பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகின.
அதே சமயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய படத்தின் நாயாகி ராஷ்மிகா தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா சாங் மற்றும் ஐட்டம் சாங் தான் அதிக அளவில் உள்ளது.
வாரிசு நடிகை சர்ச்சை பேச்சு
மெலடி மற்றும் ரொமான்டிக் பாடல்கள் அதிகமாக இருப்பதில்லை ஆனால் இந்தி திரைப்படங்களில் அப்படிப்பட்ட பாடல்கள் அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக மிஷன் மஞ்சு திரைப்படத்தில் அனைவரையும் கவரும் வகையில் அப்படிப்பட்ட ஒரு ரொமாண்டிக் பாடல் உள்ளது.

அது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் அதை கேட்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன் எனதெரிவித்துள்ளார் அவருடைய இந்த பேச்சு தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
திருகோணமலை சர்ச்சைக்குரிய புத்தர்சிலை : சிறையில் அடைக்கப்பட்ட தேரர் சாகும் வரை உண்ணாவிரதம் IBC Tamil
ட்ரம்பிற்கு கொலை மிரட்டல் விடுத்த ஈரான் அரசு ஊடகம்: புகைப்படத்தை வெளியிட்டு பகிரங்க எச்சரிக்கை IBC Tamil