அமித்ஷா தலைமையில் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

M K Stalin DMK
By Irumporai Sep 03, 2022 02:25 AM GMT
Report

தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம்

இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொள்கிறார்கள். மேலும், பிற தென் மாநில முதலமைச்சர்களான பினராயி விஜயன் (கேரளா), பசவராஜ் பொம்மை (கர்நாடகம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), சந்திரசேகரராவ் (தெலுங்கானா) ஆகியோரும், மூத்த அமைச்சர்களும்

அமித்ஷா தலைமையில் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | South Cm Meeting Today Amit Shah

தலைமைச்செயலாளர்களும், முதன்மைச் செயலாளர்களும், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நதி நீர் பிரச்சினை விவாதிக்கப்படும்

இந்த கூட்டத்தில் பொதுவான பிரச்சினைகளான நதிநீர் பகிர்வு, கடலோர பாதுகாப்பு, இணைப்பை ஏற்படுத்துதல், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.

மேலும் மாநிலங்களின் எல்லை தொடர்பாக பிரச்சினைகள், பாதுகாப்பு, சாலை, போக்குவரத்து, தொழில், நீர், எரிசக்தி, காடு, சுற்றுச்சூழல், வீட்டு வசதி, கல்வி, உணவு பாதுகாப்பு, சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களும் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நிறுவப்பட்ட நடைமுறை மற்றும் வழக்கத்தின்படி, மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக அதன் நிலைக்குழு கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.