தென்னாப்பிரிக்க வீரரைப் பார்த்து ஆக்ரோஷத்தில் கோலி சொன்ன வார்த்தை - மைக்கில் பதிவான ஆடியோவால் பரபரப்பு
தென்னாப்பிரிக்க வீரரைப் பார்த்து ஆக்ரோஷத்தில் விராட் கோலி கூறிய வார்த்தை, மைக்கில் பதிவாகி தற்போது பரப்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் அவுட் ஆகும் போது, கோலி கூறிய வார்த்தை மைக்கில் பதிவாகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 7 ஆவது ஓவரை தீபக் சாஹர் வீசினார்.
அப்போது பந்தை எதிர்கொண்ட பாவுமா, அதனை மிட் ஆஃப் திசையில் அடித்தார். உடனடியாக, பாவுமா சிங்கிள் ஓட, அப்பகுதியில் ஃபீல்டிங் நின்ற ராகுல், மிக துல்லியமாக பாவுமாவை ரன் அவுட்டாக்கினார்.
இதனால், அதிர்ஷ்டம் இல்லாத பாவுமா, 8 ரன்களில் அவுட்டானார். அவரின் விக்கெட்டை இந்திய வீரர்கள் கொண்டாடினார்கள். அப்போது, விராட் கோலி, பாவுமாவை நோக்கி, "பீல்டிங்கில் எங்களை மிகவும் லேசாக எண்ணி விட்டாயா?" என ஹிந்தியில் ஆவேசமாக கூறினார்.
அது மட்டுமில்லாமல், ஹிந்தியில் மேலும் ஏதோ மோசமான வார்த்தை ஒன்றையும், கோலி மைதானத்தில் பயன்படுத்தி இருக்கிறது. ஸ்டம்ப் மைக்கில் இந்த ஆடியோ பதிவாக, இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மைதானத்தில் அதிகம் ஆக்ரோஷமாக காணப்படும் கோலி, கடந்த இரண்டு போட்டிகளிலும், பாவுமாவுடன் சண்டையில் ஈடுபட்டிருந்தார். இதனிடையே, ராகுலின் சிறப்பான ஃபீல்டிங்கால் பாவுமா அவுட்டாக, ஆக்ரோஷத்தில் கோலி தெரிவித்த கருத்து, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
— crictalk (@crictalk7) January 23, 2022