எனக்கு முழங்காலிட சம்மதம்தான் , என் சித்தியும் கறுப்பினம்தான் : மன்னிப்பு கேட்ட டி காக்

Cricket BlackLivesMatter dekock
By Irumporai Oct 28, 2021 09:58 AM GMT
Report

தற்போது  துபாயில் நடைபெற்று வரும்  டி-20 உலகக் கோப்பை தொடரில்  பிளாக் லைவஸ் மேட்டர் இயக்கத்திற்கு  பல்வேறு அணியினர் ஆதரவு அளித்தனர். ஆனால், விக்கெட் கீப்பர் பேட்டரான குயிண்டன் டி காக் ஆதரவு தர மறுத்துவிட்டார்.

இதனால், டி காக்கின்  இந்த முடிவுக்கு  சமூகவலைதளத்தில் எதிர்ப்புகள் எழுந்தன  மேலும், இன்றைய போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து போட்டிக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக அவர் விலகியது தொடர்பாக அணி நிர்வாகம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

 டி காக்  தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டி அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில்:

நான் ஒரு கலப்பு இன குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதை அறியாதவர்களுக்காக என்னுடைய சக வீரர்கள் மற்றும் நாட்டு ரசிகர்களிடம் வருத்தம் சொல்வதுடன் ஆரம்பிக்க விரும்புகிறேன். என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரிகள் வெள்ளை நிறத்தை சேர்ந்தவர்கள்.

என்னுடைய வளர்ப்பு தாயார் கருப்பு இனத்தை சேர்ந்தவர். என்னை பொறுத்த வரைக்கும் பிறந்தததில் இருந்து இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என விவகாரம் இருந்து வருகிறது. நம் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன. அவை முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

அவர்கள் உரிமைக்காக, இந்த வழியில் நாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லும்போது, என்னுடைய உரிமை பறிக்கப்படுவதாக உணர்கிறேன்.’’ என்றார்

பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்ற ஒரு காலை மண்டியிட்டு வெளியிடும் ஆதரவு செயலை இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகள் கிரிக்கெட் போட்டிகளின்போதும் செய்து வருகின்றன.

நடப்பு டி-20 தொடரில் பங்கேற்றிருக்கும் கிரிக்கெட் அணிகளும் ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் விவகாரத்திற்கு ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 தனிப்பட்ட நிலைப்பாடு, விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, அணியிலிருக்கும் மற்ற அனைவரும் ஒருமித்த மனதோடு ஒரு செயலை செய்கையில், மனிதாபிமான அடிப்படையிலாவது நிறவெறிக்கு எதிராக டி காக் தன் கைகளை உயர்த்தியிருக்கலாம் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.