“என்னையே நான் பணயம் வைத்தேன், அப்படித்தான் அனைவரும் செய்ய வேண்டும்” - தெ.ஆப்பிரிக்க கேப்டன் ஓப்பன் டாக்

open talk india vs south africa deen elgar
By Swetha Subash Jan 07, 2022 01:37 PM GMT
Report

தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர், 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஏகப்பட்ட பந்துகளை உடம்பில் வாங்கினார்.

அதன் பலனாக 96 ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றதோடு இந்தியா டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்க விடாமல் தற்காலிகமாக தடுத்தார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை அடுத்த டெஸ்ட் போட்டியை தென் ஆப்பிரிக்காவின் தொடர் வெற்றியைத் தடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் டீன் எல்கர் தன் வெற்றி இன்னிங்ஸைப் பற்றி கூறும்போது,

"அந்த இன்னிங்ஸின் போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், ஒரு மூத்த வீரராக இறுதி வரை நிற்பேன் என்று உறுதி மொழி எடுத்தேன். நான் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

எப்போதும் இது போன்று ஒர்க் அவுட் ஆகாது, இந்த இன்னிங்ஸில் ஒர்க் அவுட் ஆனது. இது இந்தியாவுக்கு எதிராக மன அழுத்தம் தரும் தீவிரமான தொடர் ஆகும்.

என்னுடைய ஆட்டத்தை சிலர் முட்டாள் தனமானது என்று சொல்லலாம், சிலர் என்னை தைரியமானவர் எனலாம். நான் தைரியம் என்பதாகத்தான் பார்க்க விரும்புகிறேன். இதை அணியின் மீது தாக்கம் செலுத்தும் ஒரு விஷயமாகவும் பார்க்கிறேன்.

பந்து வரும் திசையில் என்னையே நான் பணயமாக வைத்தேன். அப்படித்தான் அனைவரும் செய்ய வேண்டும். நாட்டுக்காக ஆடும்போது ஒவ்வொருவரும் இதைச்செய்ய வேண்டும்.

இதன் மூலம் நீங்கள் என்ன உணர்ந்தாலும் சரி இதை விடவும் பெரியது நாம் முடிக்க வேண்டிய பணி. ஆகவே அதை முடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

வெற்றி கேப்டனாக எனக்கு முதலில் மகிழ்ச்சியளிக்கிறது. நான் சொந்த சாதனைகளுக்காக ஆடுவதில்லை. நான் என் அணியினருக்காக, என் சகாக்களுக்காகவும் வெற்றிக்காகவுமே ஆடுகிறேன்.

கடந்த 2 நாட்களாக செய்த சாதனைகளிலிருந்து நான் வீரர்களை ஒதுக்கபோவதில்லை. எனவே எங்கள் சூழ்நிலைகள் மீது தாக்கம் செலுத்துவதும் அணியை முன்னின்று வழிநடத்துவதும் மட்டுமே எனக்கு முக்கியம்.

பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே லீடர்ஷிப் என்றால் பிடிக்கும். எங்களுக்கு இது வாழ்வா சாவா டெஸ்ட் போட்டி. எனவே நான் ஆடிய டாப் 3 இன்னிங்ஸ்களில் இது மிக மிக முக்கியமான இன்னிங்ஸ் என்றே கூறுவேன்" என்றார் டீன் எல்கர்.