வனவிலங்கு பூங்காவில் எஜமானரை கடித்து குதறிய ராட்சத முதலை - அதிர்ச்சி வீடியோ

Viral Video South Africa
By Nandhini 1 வாரம் முன்

தென்னாப்பிரிக்காவில் வனவிலங்கு பூங்காவில் ஊழியர் ஒருவரை 16 அடி உயர முதலை தாக்கி உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எஜமானரை கடித்து குதறிய முதலை

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தென்னாப்பிரிக்காவில் வனவிலங்கு பூங்காவில் 16 அடி உயரமுள்ள 2 ராட்சத முதலைகளிடம் சென்ற நபர், ஒரு முதலை மீது ஏறி அமர்ந்தார். சற்று நேரத்தில் இன்னொரு முதலை அவரைப் பார்த்து கடிக்க முற்பட்டபோது, எழுந்து நின்றார். அப்போது,  எதிர்பாராதவிதமாக ஒரு முதலை அவரை வெறியோடு கடித்து குதறியது. இந்த தாக்குதலில் அந்த நபர் படுகாயம் அடைந்தார். 

இது குறித்து அந்த நபர் கூறுகையில், ஆசை ஆசையாக இந்த இரண்டு முதலையும் வளர்த்தேன். ஆனால், என்னை இப்படி கடிக்கும் என்று நினைக்கவில்லை என்று வேதனையோடு தெரிவித்தார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் தங்கள் பாணியில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

south-africa-wildlife-park16-foot-crocodile-attack