தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பயங்கர திட்டம் தீட்டிய கே.எல்.ராகுல்

South Africa India KL Rahul
By Thahir Dec 24, 2021 02:23 PM GMT
Report

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் திட்டம் என்னவென்பது குறித்து துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை பந்தாடிய இந்திய அணி, அடுத்ததாக தனது நீண்ட கால ஆசையை நிறைவேற்ற தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது அங்கு அந்நாட்டு அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை.

விராட் கோலியின் தலைமையில் வெற்றிக்கு அருகில் சென்ற போதும், டிவில்லியர்ஸ், டூப்ளசிஸ் போன்ற வீரர்கள் அதற்கு முட்டுக்கட்டைபோட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்தியா வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி முந்தைய ஃபார்மில் தற்போது இல்லை. பந்துவீச்சில் பலமாக உள்ள போதும், பேட்டிங்கில் பலவீனமாக உள்ளது. ஆனால் அந்நாட்டு களத்தில் பந்துவீச்சு மிக முக்கியமான ஒன்றாகும்.

பிட்ச்-கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தான் சாதகமாக இருக்கும். அவர்களை சமாளிப்பது கடினமான ஒன்று. அதற்கேற்றார் போல தான் ரபாடா தயாராக இருக்கிறார்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான திட்டம் குறித்து கே.எல்.ராகுல் பேசியுள்ளார். இந்திய அணி இந்த போட்டியில் ஒருபடி மேல் உள்ளது என நினைக்கிறேன்.

கடந்த முறை சுற்றுப்பயணம் செய்ததை விட பலமாக உள்ளோம். மயங்க் மற்றும் நானும் நல்ல தொடக்கத்தை கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

செஞ்சூரியன் பிட்ச்-ல் உள்ள வேகம் மற்றும் பவுன்சர்கள் வேறு எந்த களத்திலும் இல்லாததை போன்று உள்ளது. இதனால் தான் நாங்கள் முன்கூட்டியே இங்கு வந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறோம்.

ஒரு வார காலம் எங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. பவுலிங் பயிற்சியாளர் டுவானேவுக்கு இந்த களங்கள் குறித்து நன்கு தெரியும்.

அதற்கேற்றார் போல எங்களுக்கு சென்டர் விக்கெட் பயிற்சி கொடுத்து வருகிறார். இங்கு 5 பவுலர்களை கொண்டு களமிறங்குவது நல்லது எனக்கூறியுள்ளார்.