ஆட்டம் காட்டிய இந்தியா - சீட்டுக்கட்டாய் சரிந்த தென்னாப்பிரிக்கா விக்கெட்டுகள்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.துணை கேப்டன் கே.எல்.ராகுலின் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக 62.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக முகம்மது சமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.