தெ.ஆப் டி20 : தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு ; ரோகித், கோலிக்கு ஓய்வு - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிசிசிஐ!

Rohit Sharma Virat Kohli Dinesh Karthik
By Swetha Subash May 22, 2022 01:44 PM GMT
Report

ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடியதால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டிகள் முழுமையாக நிறைவு பெற்றவுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆட உள்ளது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இன்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள டி20 தொடருக்கான அணியில் ரோகித்சர்மா, விராட்கோலி மற்றும் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தெ.ஆப் டி20 : தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு ; ரோகித், கோலிக்கு ஓய்வு - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிசிசிஐ! | South Africa T20 Indian Team Announced

இதனால், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு கே.எல்.ராகுலிடம் சென்றுள்ளது. துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம்பெற்றதற்கு முக்கிய காரணம் தற்போது நடைபெற்று வரும் ஐ,பி.எல். போட்டியில் அவர் பெங்களூர் அணிக்காக கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது தான்.

தெ.ஆப் டி20 : தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு ; ரோகித், கோலிக்கு ஓய்வு - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிசிசிஐ! | South Africa T20 Indian Team Announced

அவரது அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணி தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மேலும், கே.எல்.ராகுல் தலைமையில் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் களமிறங்கும் இந்திய அணியில் துணை கேப்டன் ரிஷப்பண்ட், ருதுராஜ் கெய்க்வாட், இஷான்கிஷான், தீபக்ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக களமிறங்குகின்றனர்.

ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் அய்யர், அக்‌ஷர் படேல் ஆல் ரவுண்டர்களாக களமிறங்குகி்னறனர். ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் சுழலில் அசத்த உள்ளனர். மூத்த வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர், ஹர்ஷல் படேல், ஆவேஷ்கான், அர்ஷ்தீப்சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்த போட்டி மட்டுமின்றி, இங்கிலாந்தில் கடந்தாண்டு நடைபெற்று ரத்தான 5வது டெஸ்ட் போட்டி மீண்டும் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா கேப்டனாகவும் துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முன்னாள் கேப்டன் விராட்கோலியுடன், இளம் வீரர்கள் சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பண்ட், கே.எஸ். பரத் இடம்பிடித்துள்ளனர். ஹனுமா விஹாரி, புஜாராவும் மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளனர்.

ஆல் ரவுண்டர் ஜடேஜா, அஸ்வின் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா இடம்பிடித்துள்ளனர்.