இந்தியாவில் மேலும் ஒருவருக்கு Omicron பாதிப்பு உறுதியானது

omicron variant
By Fathima Dec 04, 2021 10:08 AM GMT
Report

குஜராத்தில் ஒருவருக்கு Omicron பாதிப்பு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் பாதிப்பு 3 ஆக அதிகரித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கோவிட் வைரசின் உருமாற்றமான Omicron வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலை தொடர்பாளர்கள், இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தவருக்கு Omicron உறுதி செய்யப்பட்டுள்ளது.