அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா - பயணம் செய்ய தடை விதித்த அமெரிக்கா

new virus south africa find omaikran
By Anupriyamkumaresan Nov 27, 2021 01:05 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in உலகம்
Report

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ஐரோப்பா மட்டுமில்லாமல் உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

ஓமைக்ரான் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த பி 1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரசில் ஸ்பைக் புரோட்டின் இருப்பதாகவும் இந்த வைரசுக்கு ஏற்கனவே போடப்பட்டுள்ள தடுப்பூசிகளை செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா - பயணம் செய்ய தடை விதித்த அமெரிக்கா | South Africa New Virus Arrive America Baned To Go

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் அண்டை நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தென்ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு உலக நாடுகள் அடுத்தடுத்து தொடர்ந்து தடை விதித்து வருகின்றன.

ஏற்கனவே ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருந்த நிலையில் தற்போது தென்ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளுக்கு பயணம் செய்ய அமெரிக்க அரசும் அதிரடியாக தடை விதித்துள்ளது.