இந்த ஆட்டம் போதுமா குழந்தை : தென் ஆப்பிரிக்காவை கதறவிட்ட நெதர்லாந்து
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று - நெதர்லாந்து அணியிடம் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா.
டி20 உலகக் கோப்பை சூப்பர் லீக் சுற்று நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. அரை இறுதி சுற்றுக்கு குரூப் ஒன்றிலிருந்து நியூஸ்லாந்து, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில் குரூப் 2 வில் இருந்து இதுவரை எந்த அணியும் அரை இறுதிக்கு செல்லவில்லை. நாளை நடைபெறும் மூன்று லீக் ஆட்டத்தில் முடிவிலேயே அரையிறுதிக்குச் செல்ல போகும் அணிகள் எது என்று தெரிய வரும்.
அதன்படி இன்று நடைபெற்ற போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்த நிலையில் முதலில் களம்மிறங்கிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது.
ஆக, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தின் இறுதியில், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியது.
இதன் மூலம் , நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும், நெதர்லாந்தின் வெற்றியால் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.