20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் - தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பெயர் அறிவிப்பு...!

T20 World Cup 2022 South Africa National Cricket Team South Africa
By Nandhini Sep 06, 2022 12:27 PM GMT
Report

டி-20 உலக கோப்பைக்கான கலந்து கொள்ளப்போகும் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 7-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் டி-20 உலக கோப்பைக்கான கலந்து கொள்ளப்போகும் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

south-africa-national-cricket-team

தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களின பெயர் விவரம் -

டெம்பா பவுமா ( கேப்டன் ),

குயிண்டன் டி காக்,

ஹென்ரிச் கிளாசன்,

ரீசா ஹெண்ட்ரிக்ஸ்,

கேசவ் மகராஜ்,

எய்டன் மார்க்ரம்,

டேவிட் மில்லர்,

லுங்கி ங்கிடி,

டுவைன் பிரிடோரியஸ்,

ககிசோ ரபடா,

ரீல்லி ரோசவ்,

ஆன்ரிச் நோர்ட்ஜே,

வெய்ன் பார்னெல்,

தப்ரைஸ் ஷம்சி,

ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு  கேப்டனாக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம் பெறவில்லை.